ஒழியுங்கள் சமுதாயம் மீதான உங்கள் அலட்சியப்போக்கை!!!


இறைவனால் படைக்கப்பட்டது தான் இயற்கை. இயற்கையை படைப்பதும், அழிப்பதும் அவன் செயல். இதில் மனிதர்களாகிய நாம் குறுக்கிடுவது எவ்வகையில் நியாயம்? அப்படியே நம் தேவைக்கு நாம் இயற்கையை நாம் அழித்தாலும் பதிலுக்கு இயற்கைக்கு ஏதேனும் நாம் செய்கின்றோமா என்றால் அதுவும் இல்லை. இதற்கு முக்கியக் காரணம் நம் அலட்சியப்போக்கு.


 
ஒரு உதாரணத்திற்கு ஒரு கிராமத்தில் தண்ணீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறுகிறது எனக் கொண்டால் சம்பந்தப்பட்ட தண்ணீர் வடிகால் வாரியம் அதைக் காண்பதற்கான வாய்ப்பு இருக்காது. அவ்வாரியத்திற்கு மக்கள் தான் தகவல் சொல்ல வேண்டும். பின் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். ஆக இதைத் தான் நாங்கள் பொதுவாக எடுத்துரைக்கிறோம்.

 எங்கு பார்த்தாலும் மின்வெட்டு என்கிறார்கள்.  மின் வெட்டைப் பற்றி கவலைப்படும் நீங்கள் ஒரு நாளாவது மின்சாரத்தை சேமிக்க யோசித்ததுண்டா????????


இனியாவது பராமரிப்போம் சமுதாயத்தை! கீழ்க்காணும் கோட்பாடுகளை ஏற்று செயல்பட்டாளே நீங்கள் நாட்டிற்கும் வீட்டிற்கும் பாடுபட தயாராகிவிட்டீர்கள் எனப் பொருள்படும்.
  • சமுதாயத்தைப் பாதுகாப்பதில் நமக்கும் தகுந்த அக்கறை வேண்டும்.
  • நம் கடமைகளை சரிவர செய்து வந்தாலே நாட்டின் பல குறைகள் ஒழிந்துவிடும்.
  • இறைவனால் அமைக்கப்பட்ட இயற்கை அன்னையைப் பாதுகாத்தல் நாட்டின் முதுகெழும்பான வேளாண்மையை மென்மேலும் செழிக்கச்செய்யும்.
             நன்றி!!!

சிந்திப்பீர்!!!


நீரின்றி அமையாது உலகு என்றார் வள்ளுவர். நீரின் அருமை பெருமை அறிந்த பலரும் நீரை வீணாக்குகிறோம். உண்ண உணவு இல்லாவிடிலும் பல நாள் வாழலாம். ஆனால் நீரில்லாமல் நாம் ஒரு நாள் கூட வாழ இயலாது என யாவரும் அறிவோம். அறிவது என்பது அறிந்து கொள்ள மட்டுமல்ல அதன் வழி நிற்பதும் தான். கீழ்க்காணும் படங்கள் யாவும் மக்களின் அலட்சியப்போக்கை சுட்டிக்காட்டுவதாகும். அரசைக்கூறி பயனில்லை. மக்கள் வழியே மகேசன் வழி என்பார்கள். இங்கு மக்களே அலட்சியமாய் இருந்து விடில் இனி எங்கு அரசினை குறை கூறுவது??


  • எதுவும் இருக்கும் போது அதன் முக்கியத்துவம் தெரியாது. அது இல்லை எனும் நிலை வரும் போது தான் அதன் முக்கியத்துவம் தெரியும் எனும் சொல்லிற்கேப தண்ணீரின் முக்கியத்துவமும் இங்கு பலருக்கு தெரியாமல் இருக்கிறது. அதில் இதுவும் ஒன்று..


    இது சோமனூரில் எடுக்கப்பட்ட நிகழ்வு
     
  • தண்ணீர் இல்லாக்காலங்களில் தண்ணீரே இல்லை என்று புலம்புகிறோம். ஆனால் தண்ணீர் வந்தால், தண்ணீர் குழாய்களை திறந்து வைத்தே வீணாக்குகிறோம்.
 


இது கருமத்தம்பட்டியில் எடுத்தது.


மேலும் சிறப்பான பராமரிப்பு இல்லாததால் இது போன்று தண்ணீர் வீணாய் கழிவு, சாக்கடையில் கலந்து வீணாகிறது.


சிந்திப்போம் செயல்படுவோம். பதிவுகள் தொடரும்.......

உறுப்பினர் விண்ணப்பம்

  • இக்குழுவில் நீங்களும் இணைய விருப்பப்பட்டால் கீழுள்ள இணைப்பில் சென்று விண்ணப்பத்தைப் பெறவும். 
  • பின் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து fsc@socialworker.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
  •  குடும்ப வழங்கல் அட்டை/வாக்காளர் அடையாள அட்டை/பள்ளிச் சான்றிதழ் என ஏதேனும் ஒரு நகலை விண்ணப்பத்துடன் இணைக்கவும்.
 


எங்களின் நோக்கங்கள்

  •  ஆதரவற்றுத் தவிக்கும் பெரியோர் மற்றும் சிறியோர்களுக்கு ஆதரவாய் மட்டுமில்லாது உறவாய் இருந்தும் ஆதரித்தல்.
  •  பசுமையான இந்தியாவிற்காக மரங்களை நடுதல்.
  •  சீரற்றுக் கிடக்கும் நம் சுற்றுப்புறத்தைத் தூய்மை செய்தல்.
  •  சமூகத்தைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துதல்.
  •   மாணவ,மாணவியரின் தனித்திறமைகளை மேம்படுத்தும் பொருட்டு போட்டிகளை நடத்துதல்.
  •  இலவச மருத்துவ முகாம்களை அமைத்தல்.

முகவுரை


Friends society care என்பது ஓர் சமூக நலக் குழுமமாகும். சமுதாயத்தை மேம்படுத்துதல் மற்றும் பசுமை காத்தல் போன்ற உதவிகளை எங்களால் இயன்ற வரை சமூகத்திற்குச் செய்து வருகிறோம். எங்களைப் பற்றிய முழு விவரம் மற்றும் நோக்கங்கள் பின்வருமாறு,







                                      

                        தலைவர்: ஜெப்ரின் மெல்கோ.ஆ
           துணைத் தலைவர்: பிரகாஷ் குமார்.கோ
                     செயலாளர்: அந்தோணி லாரன்ஸ்.பீ
       துணைச் செயலாளர்: முகமது ராஜித் அலி.அ
                  பொருளாளர்: இளவரசன்.பெ


         முகவரி: 
                       154, ஸ்ரீநகர்,
                       கோவை சாலை,
                       காங்கயம்,
                       திருப்பூர்.